இலங்கை: பாலஸ்தீன மக்கள் மீதான இனவழிப்புத் தாக்குதலை நிறுத்தக்கோரி போராட்டம்

03-11-2023

இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் பலஸ்தீன் மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம்  கிழக்கு மாகாணத்தில் உள்ள கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

 

கிண்ணியா சூரா அமைப்புடன் பல சமூக நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கண்டன எழுச்சி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இந் நிகழ்வில்  பலஸ்தீன் மக்கள் படுகின்ற இன்னல்கள் குறித்து விளக்கமளிக்கப் பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டு கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன.

 

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலைக்கண்டித்து சில நாடுகளில் மக்கள் எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,இதுவரையில் இந்த தாக்குதலுக்கு இலங்கையில் கண்டனப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையில் தற்போது இன்று இந்த போராட்டம் கண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனாலும் இஸ்ரேலின் இனவழிப்பு நடவடிக்கை இதுவரையில்  காசாவில்   நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.