கடன் நெருக்கடியில் சிக்கிய இலங்கை- உதவப்போகும் நாடுகள்
29-11-2023
0
41

இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் கடன் நிவாரணம் மற்றும் கடனை மீளசெலுத்துவதற்கான காலக்கெடுவை நீடிப்பது குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளின் குழுவிற்கு இந்தியா பிரான்சுடன் ஜப்பானும் தலைமைதாங்குகின்றது. ஆனால் இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கியுள்ள சீனா இந்த குழுவில் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.
கடும் நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை கடந்த வருடம் முதல் கடனவழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கியுடன் இலங்கை இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதன் பின்னரே கடன்வழங்கிய ஏனைய நாடுகளுடன் இணக்கப்பாடு சாத்தியமாகியுள்ளது.