இலங்கையில் எண்ணைசுத்திகரிப்பு மையத்தை நிறுவுகிறது சீனா

02-11-2023

அம்பாந்தோட்டையில் 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியில் எண்ணைசுத்திகரிப்பு மையம் ஒன்றை நிறுவுவதற்கான உடன்பாடு இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ளது.

 

ரணில் விக்கிரமசிங்கா சீனா சென்றபோதே அதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. அதன் இறுதிக்கட்ட பணிகள் எதிர்வரும் இரு வாரங்களில் நிறைவுசெய்யப்படும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இலங்கையில் ஒரே தடவையில் மிகப்பெரும் முதலீடு ஒன்று செய்யப்பட்டது இதுவே முதல் தடவை என அவை மேலும் தெரிவித்துள்ளன.

 

இதனிடையே, நிபந்தனைகள் காரணமாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவின் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பணிகள் தமதாகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.