நான் மன்னிப்பு கேட்குற ஜாதியா?-நடிகர் மன்சூர் அலிகானின் கேள்வியால் சர்ச்சை
21-11-2023
0
20

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தான் தற்போது சோஷியல் மீடியா முழுக்க விவாதப்பொருளாக மாறியுள்ளது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரையுலகை சார்ந்த பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்ட விஜய்யின் 'லியோ' படத்தில் மன்சூர் அலிகானும், திரிஷாவும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், 'லியோ' படத்தில் திரிஷாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெட்ரூம் காட்சி இல்லை. 150 படங்களில் நம்ம பண்ணாத ரேப்பா என முகம் சுளிக்கும் வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், நடிகை திரிஷாவும் மன்சூர் அலிகானுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள மன்சூர் அலிகான், என்னை பெரிய ஹீரோ ஆக்கியுள்ள எல்லாருக்கும் நன்றி. நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. ஒரு ஆயுட்கால உறுப்பினரை கேள்வி கேட்காம, நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. என்ன பிரச்சனைன்னு கேட்கணும். நான் நடிகர் சங்கத்துக்கு நாலு மணிநேரம் டைம் தர்றேன். நான் மன்னிப்பு கேட்குற ஜாதியா? நான் வேணாம்ன்னு அமைதி காத்திட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் டந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.