விஜய்யின் 69 படத்தின் இயக்குனர் யார்?

28-10-2023

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 69ஆவது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பது குறித்த புதிய தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் பல்வேறு ரெக்கார்டுகளை முறியடித்து வருகிறது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவுக்கு வசூலில் லியோ சாதனை படைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்திற்காக விஜய் தயாராகியுள்ளார்.

 

இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்யுடன் தளபதி 68 படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, யோகி பாபு மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். வெங்கட் பிரபு படம் எந்த ஜேனரில் உருவாக்கப்படும் என்று யூகிக்க முடியவில்லை என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்த படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல்கள் கோலிவுட்டில் பரவி வருகின்றன. அதாவது ஷங்கர் இந்த படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது.