இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இரு நாட்டுக்கான ஆயுத விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்
06-11-2023
0
19
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல்களினால் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுவதால் இந்த இருவருக்கும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபையின் மத்திய கிழக்கிற்கான பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள நான்கு வர்த்தக அமைப்புக்கள் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி வர்த்தகத்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் மன்னிப்புச்சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.இஸ்ரேலுக்கு அதிகளவு ஆயுதங்களை அமெரிக்காவும், ஜேர்மனியுமே வழங்கி வருகின்றன. வெள்ளைமாளிகை இஸ்ரேலுக்கு 14 பில்லியன் டொலர்கள் நிதி உதவியையும் வழங்க தீர்மானித்துள்ளது.
இதனிடையே ஹமாஸுடன் நடந்து வரும் போரில் காசா பகுதியில் அணுகுண்டு வீசுவதுதான் இஸ்ரேலின் விருப்பம் என்று அந்நாட்டின் அமைச்சர் அமிசாய் எலியாகு வானொலி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
எலியாகுவின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எலியாகுவின் பேச்சு அடிப்படை உண்மை இல்லாதவை. அப்பாவிகளுக்கு தீங்கு செய்யாமல், சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்ரேலும் ஐடிஎஃப்-ம் செயல்படுகின்றன. எங்களின் இறுதி வெற்றி வரை நாங்கள் அதைத் தொடருவோம் என்றார்.