மூச்சு விடும் முள்ளிவாய்க்கால்...

26-01-2024

0

2

உலகத்தின் அடிப்படை குடும்ப அமைப்பு ஆகும், ஆனால் அந்த குடும்ப அமைப்பை தாண்டி தனி மனிதர்களின் முன்னோக்கு விரியும் போதே அங்கு மனித கூட்டங்கள் ஒரு இனமாக இணைகிறார்கள். நாகரிகங்களின  அடிப்படை இங்கிருந்தே தொடங்குகின்றது.

தனி மனிதர்களினாலோ/குடும்ப அமைப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்ட காலங்களிலோ நாகரீக வளர்ச்சிகளை உலகம் காணவில்லை. இனமாக ஒன்று சேர்ந்த காலத்தின் பின்னரே நாகரீகங்கள் தோன்ற தொடங்கியது. இதன் பின்னால் சுயநலன்களை தாண்டி பொதுநலன்களை சிந்தித்த மனிதர்கள் இருந்தார்கள். இவர்கள் அழியும் போது நாகரீகங்களும் அழிந்து கொண்டன.

நிற்க.. இன்று ஈழதமிழர்கள் பூர்வீகமாக வாழும் தாயக பகுதிகளில் நாகரீகமற்ற தனிநபர்கள் மற்றும் சுயநலத்தால் இயங்கும் தனிமனிதர்களே வாழ்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் சுயநல தேவைகளுக்காக தமிழர் என்ற இன அடையாளம் தேவைப்படுகின்றது. அதனை தாண்டி அவர்கள் சுயநல எல்லைகளை விட்டு வெளியே வந்து சிந்திக்க போவதில்லை. இதற்கு தாயக பகுதிகளில் அன்றாட நடக்கும் சம்பவங்களும் செய்திகளும் தெளிவான சாட்சிகளாகின்றன.

இங்கு நாம் என்ன செய்ய போகின்றோம் என்ற கேள்வி பொதுநலன் இனநலன் சார்ந்து சிந்திக்கின்ற சிறுபான்மை தமிழர்களிடம் எழுந்திருக்கின்றது. தமிழரின் நாகரீகத்தை மீள எடுத்து தந்துவிட்டு போனவர்களின் மறைவின் பின்னால் ஏற்பட்டு கொண்டுள்ள சிதைவுகளுக்கு, ஏன் இப்படி நடக்கின்றது? இதற்கு மேலும் நிலைமை மோசமாகும் வாய்ப்புக்கள் உள்ளதா போன்ற சந்தேகங்களுக்கும், இவற்றுக்கெல்லாம் யாரை பொறுபாளாக்கியாக்குவது போன்ற கேள்விகளை எல்லாம் தாண்டி  பெரும் குழப்பமே எம்மில் மிஞ்சுகின்றது. 

வழி என்ன..? ஈழதமிழரின் நாகரீக சிதைவின் முதல் விளைவே முள்ளிவாய்க்கால். இதற்கு முற்று முழுதாக ஈழதமிழர்கள் முதல் பொறுப்பேற்கும் போதே அதற்கான தீர்வுக்கான வழி திறக்கும். இந்த வழியின் மூலம் எமது இனம் சற்று தொலைவில்  இழந்த நாகரீகம் மீண்டும் கை சேரும் காலத்தை உருவாக்கி கொள்ள முடியும்..

இல்லையென்றால் இன்னொரு மூன்னூறு வருடங்கள் சிதைந்து அழிந்து மீண்டுமொரு 33 வருடங்களை காண்பார்கள்..? அதன் பின்னாலும் ஒரு முள்ளிவாய்க்கால் மூச்சுவிட்டு கொண்டிருக்கும்.