‘’ என்னுடைய வெற்றிக்கு இந்த மந்திரம் தான் காரணம்”-நானி
06-12-2023
0
44

நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நானியின் படங்களுக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் நானியின் ‘ஹாய் நான்னா’ படத்திற்கும் இரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.
நானியின் 30-வது படத்தினை அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஹாய் நான்னா’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது. வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிச.7ஆம் திகத தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந் நிலையில், நடிகர் நானியுடனான கேள்வி பதில்கள் நேரத்தில் ‘உங்களின் வெற்றிக்கான மந்திரம் என்ன? தயவு செய்து சொல்லுங்கள், நானும் அதை என்னுடைய களத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன்” என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு நடிகர் நானி, “எந்த மந்திரங்களையும் எதிர்பார்ப்பதில்லை என்பது தான் என்னுடைய மந்திரம்” எனப் பதிலளித்துள்ளார்.