இப்படி ஒரு செயலை யாருமே செய்யலையே - பாராட்டு மழையில் இயக்குனர் கிருத்திகா
29-11-2023
0
27

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யாமேனன் நடித்திருக்கும் புது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இப்படி ஒரு செயலை யாருமே செய்ததில்லை என இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
பொதுவாகவே எந்த ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ஹீரோயின் பெயர் இருக்காது. ஹீரோவின் பெயர் மட்டும் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதாநாயகியின் பெயருக்கு பிறகு கதாநாயகனின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. இந்த விஷயம் ரசிகர்களை ஈர்த்து இந்த படத்திற்கு பாராட்டுக்களை பெற்று தருகிறது.
மேலும் இந்த படத்தின் பூஜை முடிந்த சமயத்தில் நித்யா மேனன் கொடுத்திருந்த பேட்டியில், திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் ஷோபனா கதாபாத்திரம் பிடித்த அனைவருக்கும் இந்த படத்தில் இருவரும் தனது கதாபாத்திரம் பிடிக்கும் என கூறினார். நகரத்தில் நடக்கும் காதல் கதையை மையப்படுத்திய கதையாக காதலிக்க நேரமில்லை படம் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி, நித்யா மேனன், ஜெயம் ரவி கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்த படத்திற்கு மற்றொரு லெவலை கொடுக்கப்போகிறது.