காஸாவில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட்டுள்ள 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள்

03-11-2023

0

14

காஸாவில் தற்போது 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். முறையான மருந்து, உணவு, குடிநீர் கிடைக்காததால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும் காசாவில் இடம்பெறும் கொடிய போர்ச் சூழலுக்கு மத்தியில் பிரசவிக்கும் தாய்மார்கள் மயக்க மருந்து எதுவுமின்றி  சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதுபோன்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணி மருந்து கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மின்சாரம் இல்லாத இடங்களில் டோர்ச் லைட் மூலம் பிரசவம் நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்படி, காஸாவில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 160 ஆகும்.

 

இந்த நிலையில்,இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் காசா பகுதியில் 'ஒவ்வொரு நாளும் 420 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர்' என யுனிசெப் தெரிவித்துள்ளது.

 

காஸாவில் 8,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.