விளையாட்டில மதத்த கலந்து, குழந்தைகள் மனசில விசத்த கலந்திருக்கிறீங்க?

12-11-2023

0

20

வெளியானது ரஜினியின் லால் சலாம் பட டீசர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அதன் டீசர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

 

ரஜினிகாந்துடன் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், கபில் தேவ உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். லால்சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

 

கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.  இந்தப் படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று ரஜினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

https://x.com/rajinikanth/status/1723572051397820907?s=20