தோல்வியடைந்த இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக்கூறி பிரதமர் பாராட்டு

21-11-2023

0

12

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய வீரர்களை பிரதமர் மோடி ஆறுதல் படுத்தி நம்பிக்கை வார்த்தைகளைக்கூறியுள்ளார். 

 

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அவுஸ்திரலியாவிடம் தோல்வியடைந்த இந்திய வீரர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் களத்திலேயே கண்ணீர் விட்டனர். இதையடுத்து சில நிமிடங்களில் வீரர்களின் அறைக்கே சென்ற இந்தியப் பிரதமர் மோடி. அங்கு ரோகித் சர்மா, விராட் கோலி இருவரின் கைகளையும் பற்றி நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறியதோடு பயிற்சியாளர் டிராவிட்டை அழைத்து பாராட்டினார்.

 

மேலும் ஜடேஜா, கில், ஸ்ரேயஸ், பும்ரா போன்றோரை அழைத்து அவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறிய பிரதமர், முகமது ஷமியின் பெயரைக் கூறி அழைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்து சிறப்பாக ஆடியதற்காக பாராட்டினார்.