இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்-அமெரிக்க தூதுவர் நம்பிக்கை

09-11-2023

0

19

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தவிடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும் தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அடுத்தவருடம் நடைபெறவேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்கிறோம். சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதையும்  எதிர்பார்த்துள்ளோம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக இலங்கையில் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில்  இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி  தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக அந்த கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.