மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன்-ஜனாதிபதி ரணில்
13-11-2023
0
20

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் , தடம்புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில்தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர்நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தினார்.
மேலும் கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாகஅரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்துஅடையச் செய்ததாக குறிப்பிட்ட அவர், துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனைஇன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள்ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இதனை இனியும் தொடர முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரணில் குறிப்பிடுகையில்,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகாலஇலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும். எவரும்பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன்.
நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம். அரசாங்கம் மாத்திரமல்லஅனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம்வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. பூச்சியமாக வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் டொலராகநிலைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம். 2023 ஆம்ஆண்டு 3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபாமாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி என்றார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின் கொண்டுவரப்படும் வரவு செலவுத் திட்டம்தொடர்பில் நாட்டில் அனைத்து தரப்பினர்களினதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.