மனதில் இன்னும் வலி இருக்கிறது- இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த செய்தியாளர்

28-10-2023

நுசைரத் (Nuseirat) என்ற அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்  னைவி, மகன், மகள், பேரன் என  நால்வரை இழந்த அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளராக பணியாற்றிய வல் அல் ததோ (Wael al-Dahcouh) மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

 

கடந்த  ஒக்டோபர் 7 ஆம் திகதி  இஸ்ரேல்  மீது ஹமாஸ்  போராளிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 1000ம் வரையிலான  பொது மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் 200 வரையிலான மக்கள் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

 

இந்த நடவடிக்கைக்குப் பழிவாங்கும் விதமாக  ஹமாசை அழிக்கின்றோம் என்ற போர்வையில் பாலஸ்தீனர்களை கொடுரமாக கொன்று அழிக்கும் செயற்பாட்டை இதுவரையில் இஸ்ரேல் நிறுத்தவில்லை. சுமார் 8000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

உணவு,மருத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பாதிக்கப்படும் மக்களை சென்றடைய விடாது முற்றாக தடைசெய்துள்ளது.பெரும் அளுத்தங்களுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிப்பொருட்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

 

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை பலிகொடுத்த அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் வல் அல் ததோ, தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு  தன்னுடைய பணிக்கு திரும்பியிருப்பது. பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இது குறித்து அவர், "எங்கும் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருக்கிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னுடைய மனதில் இன்னும் வலி இருக்கிறது. இருந்தாலும், மீண்டும் கேமரா முன்பு வந்து பேசுவது, சமூக ஊடகங்கள் மூலம் மக்களை தொடர்பு கொள்வது எனது கடமை என உணர்ந்தேன்’’ என்றார். காசா மக்கள் பலரும் அவரின் சேவையை பாராட்டி, அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

53 வயதான ததோ பல ஆண்டுகளாக பாலஸ்தீனப் போர் பற்றி பல ஆண்டுகளாகவே செய்திகளை சேகரித்து வந்தவர் ததோ. காசாவாசிகளால் கொண்ட்டாடப்படும் ததோ தற்போது போருக்கு குடும்பத்தை இழந்து நிற்கிறார். பாலஸ்தீனத்தில் குறிப்பாக  காசாவில் போர் பாதிப்புகளால் மக்களின் வேதனைகளை சாட்சிப்படுத்தியவரே போரின் சாட்சியாக நிற்கிறார்.  

இந்திலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.