இஸ்ரேலுடனான உறவை துண்டித்தது பொலிவியா
02-11-2023

காஸாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுடனான அரசுமுறை உறவுகளை தென்னமெரிக்க நாடான பொலிவியா துண்டித்திருக்கிறது. காஸாவில் "ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற" ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக பொலிவியா தெரிவித்துள்ளது.
"காஸாவில் நடைபெறும் ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலை நிராகரித்தும், கண்டித்தும் உறவுகளை துண்டிக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது” என்று பொலிவியாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஃப்ரெடி மமானி கூறினார்.
பொலிவியா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், முற்றுகையிடப்பட்ட காஸா பகுதிக்கு உதவிகளை வழங்குவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
போரில் இஸ்ரேலுடனான உறவை துண்டித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.