உலகக் கோப்பை - இந்தியா – நெதர்லாந்து அணிகள் இன்று   மோதுகின்றன

13-11-2023

0

13

உலகக் கோப்பை தொடரின் 45வது போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் பெங்களூருவில் இன்று  விளையாடுகின்றனர்.

 

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

 

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த லீக் ஆட்டத்தில் இந்தியா  மற்றும் நெதர்லாந்து அணிகள் பெங்களூரில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.