அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள்
31-10-2023

இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவினுள் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக நியூயோர்க்கில் உள்ள தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தகவலின் படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்களில் பெரும்பாலானோர் புகலிடம் தேடியும், வேலைவாய்ப்பிற்காகவும் சட்டவிரோதமாக நுழைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2023 ஒக்டோபர் மாதம் வரையில் சர்வதேச ரீதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 2 மில்லியன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.