''கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள்”- திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தல்

07-11-2023

0

19

இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்ட கருத்தில், ”பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் பலர் உயிரிழக்கும் மோசமான நிலையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

 

அதே நேரம் கைதிகள் விடுவிக்கப்படும் வரையில் போர் நிறுத்தம் இல்லையென இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

 

இன்னும் 48 மணி நேரம் தான்!  உள்ளது என  இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, தெரிவித்துள்ளார்.“காசாவில் வடக்கு, தெற்கு எல்லாம் இப்போது இல்லை. மொத்த காசாவும் இரண்டாகப் பிரிந்துள்ளது. நாங்கள் காசாவை சூழ்ந்துவிட்டோம்.   காசா நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்துவிடும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

காசாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.