பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது மிகவும் பயங்கரமானது -அருட்தந்தை மா.சத்திவேல்

11-11-2023

பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது மிகவும் பயங்கரமானது என்பது,  மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை மா.சத்திவேல் கூறியுள்ளார்.

 

'பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகரை கொலை செய்ய சதி செய்ததாகக்  குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று(10) விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக   கருத்து வெளியிட்ட  சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்,   

 

'பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும்  யங்கரவாதிகளின் முயற்சி  தோல்வி அடைந்துள்ளது.  பயங்கரவாத தடைச் சட்டம், அவர்களின்  இளமயையும் குடும்ப வாழ்வையும் எதிர்காலத்தையும் சூறையாடியுள்ளது.

 

இவ்வாறான பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை, ஜனநாயகமும் மனித சுதந்திரமும் காப்பாற்றப்படப் போவதில்லை.தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கு எதிராகவும் கொண்டுவரப்படவுள்ளது" என எச்சரித்துள்ளார்.