நம் முன்னோர்களைப் பின்பற்றுங்கள் -ரஷ்ய பெண்களிடம் அதிபர் புதின் வலியுறுத்தல்

02-12-2023

1

36

கடந்த 1999-ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில், உக்ரைன் போரில் 3 லட்சம் ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர்  புதின், 

 

நம் முன்னோர்கள் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. எங்கள் பாட்டி வம்சத்தில் ஏழு,எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்று வளர்த்துள்ளனர். இந்த மரபைநினைவில் கொண்டு இன்றைய இளம் தலைமுறை பெண்களும் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று குறைந்து வரும் ரஷ்ய மக்கள் தொகையை அதிகரிக்க தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும் என்றார்.