இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட காஸாவில் தவிக்கும் மக்கள்

17-10-2023

0

15

இஸ்ரேல்   மீது காஸா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து  பழிவாங்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடு பட்டுள்ளது.  இதனால் பாலஸ்தீனத்தின்  பெரும்பகுதி இடிந்த குவியல்களாக மாற்றியுள்ளது, மக்கள் குண்டுகளின்  முற்றுகைக்கு  மத்தியில் தண்ணீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத படி உள்ளனர்.  2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசா - தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், தண்ணீர் எடுப்பதற்காக மக்கள் கடலுக்கு அருகில் கிணறுகளை தோண்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.   இஸ்ரேல் மின்சாரத்தை துண்டித்ததை அடுத்து, ஜெனரேட்டர்களை மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றன. அதுவும்  எரிபொருள் இன்னும் சில நாட்களே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

“உணவு தீர்ந்து வருகிறது,  திறந்திருக்கும் சில பல்பொருள் அங்காடிகளில், பெரும்பாலானவை வெறுமையாக உள்ளன. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. காசா மக்கள் பெரும் மனித அவலத்தை சந்தித்துள்ளனர். இருந்தும் இஸ்ரேல் அதன் பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக இல்லை. பயங்கரவாதிகளை அழிக்கின்ரோம் என்ற பெயரில் அப்பாவி பொது மக்களை கொன்று குவித்து வருகின்றது. கடந்த 2009ம் ஆண்டு  சிறிலங்கா அரசால்  நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலையை உலக நாடுகள் எவ்வாறு வேடிக்கைப்பார்த்ததோ அதே போல் பாலஸ்தீனர்கள் அழிக்கப்படுவதையும் வேடிக்கைதான் பார்க்கின்றது இந்த உலக நாடுகள்.