செங்கடல் பகுதியில் இரு இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாக்குதல்
04-12-2023
0
74

செங்கடல் பகுதியில் இரண்டு இஸ்ரேலிய கப்பல்களைத் தாக்கியுள்ளதாக யேமனின் ஹவுத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹவுத்தி(Houthis) அமைப்பினர் தங்களின் கடற்படையின் எச்சரிக்கையை இரண்டு கப்பல்களும் புறக்கணித்ததை தொடர்ந்து அவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
செங்கடல் பகுதியில் கப்பல் ஒன்று ஆளில்லா விமானதாக்குதலிற்குள்ளாகியுள்ளன எனத் தெரிவித்துள்ள பிரிட்டனின் கடற்சார்பாதுகாப்பு அமைப்பு, யேமனின் ஹொடெய்டா துறைமுகத்திலிருந்து 101 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மற்றுமொரு கப்பல் ஆளில்லா விமானதாக்குதலிற்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க யுத்தகப்பல் ஒன்றும் ஏனைய கப்பல்களும் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளன என்பதை அமெரிக்காவின் பென்டகன் உறுதி செய்துள்ளது.
ஒக்டோபர் 7ம் திகதிக்கு பின் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கைகளை காஸா மீது ஆரம்பித்தைத் தொடர்ந்து ஹவுத்தி அமைப்பினர் இஸ்ரேலிய கப்பல்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கில் கடல்சார் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.