இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய இந்திய அணி

19-11-2023

0

14

2023-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியபோது, அவுஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் கணிக்கவில்லை. 

 

அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.  அவுஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றுள்ளது.

 

உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாகத் தென் ஆப்பிரிக்கா பயணம் சென்று அந்நாட்டு அணியிடம்  அவுஸ்திரேலிய மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்தியாவுக்குப் பயணம் செய்து இந்திய அணியிடம் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் தோற்றது. 

 

மேலும் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதும் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியிடமும், தென் ஆப்பிரிக்காவிடமும் தோற்றதால், அவுஸ்திரேலிய அணியின் மீதான நம்பகத்தன்மையும், முன்னாள் சாம்பியன் என்ற பெருமிதப் பார்வையும் இரசிகர்கள் மத்தியில் குறைந்தது. அதே நேரம் இந்தியா இம்முறை வென்றே தீரும் என்ற பெரும் நம்பிக்கை இந்திய மக்களிடம் இருந்தது.

 

இந்த நிலையில்  அவுஸ்திரேலிய அணி,  உலகக் கோப்பையை வென்று இந்திய இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.