சுவை, தரம் மற்றும் பாரம்பரியம்
10-11-2023

சுவை, தரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் கலவையான டில்டா (tilda) நடாஷா குமாருடனான 50ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைவினை அறிவித்துள்ளது.
டில்டா சிறந்த தரம் மற்றும் நீண்டகால பாரம்பரியத்திற்கு புகழ்பெற்ற ஒரு வியாபார நாமம் ஆகும். டில்டா அரிசிகள் ஒவ்வொரு உணவு உண்ணும் தருணத்தையும் பொன்னான தருணமாக மாற்றும் திறன் கொண்டது. டில்டா வியாபார அடையாளத்துடன் ஒன்றிணைந்த கலாசார ஆர்வத்தினால் இங்கிலாந்தில் உள்ள இந்திய ஓவியரான நடாஷாவுடன் இணைந்து புதிய 2 kg அரிசியினை அறிமுகப்படுத்துகிறது.
இதில் நடாஷா நீலம், இளஞ்சிவப்பு மற்றும் முகலாயர் கட்டிடக்கலை பின்னணியில் பாரசீக வடிவங்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் எக்காளம், முரசு வாசிப்போரினை இணைந்து கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இது சுவை மற்றும் கலை சங்கமிப்பினை உறுதி செய்து இதனூடாக அரிசி மட்டுமின்றி கலாசார அனுபவமும் அனைவருக்கும் வழங்கும் நோக்கத்தினைப்பூர்த்தி செய்கின்றது.
ஐப்பசி மாதம் முதல் இங்கிலாந்தில் உள்ள அனைத்து சில்லறைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ் புதிய 2 kg அரிசி போணியினை {Tin) அறிமுகபடுத்தல் நிகழ்வின் போது டில்டாவைச் சேர்ந்த அனா பெஹஷ்டி{Anna Beheshti} இது பாரம்பரியங்கள் மற்றும் உணவுகளின் சரியான கலவையாகும். டில்டா 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலை, இசை மற்றும் கலாசாரங்களை இங்கிலாந்தில் கொண்டாடி வருகின்றது. சுவைகள் மற்றும் கலைகள் ஒன்றினணயும் அற்புத பயணத்தின் ஆரம்ப கட்டம் இது என குறிப்பிட்டார்.