காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
18-10-2023
0
13
பெருமளவிலான மக்கள் பலி
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 7ம் திகதி அன்று, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 1300 பேர் இறந்தனர், 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது இஸ்ரேலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிக மோசமான ஒரு நாளாக கருதப்பட்டது.
ஹமாஸின் இந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் ஹமாஸை ஒழிக்கப் போவதாக அறிவித்து காஸா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் காசா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு வழமை போல் ஐ.நா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.