இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்கத் தயார்-துருக்கி

01-11-2023

இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார்.இது தொடர்பில் நாம் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம் என சனிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற மிகப்பெரும் பேரணியில் கலந்துகொண்டு பேசும்போது துருக்கி அதிபர் றிசெப் ரையீப் ஏர்டோகன்  அறிவித்துள்ளார்.

 

 இதன் போது 'இஸ்ரேல் எப்படி இங்கு வந்தது என எங்களுக்கு தெரியும், நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள், நீங்கள் ஒரு குழுவே தவிர நாடு அல்ல. மேற்குலகம் உங்களை ஆழ்கின்றது. எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. ஹமாஸ் விடுதலைப்போராட்ட அமைப்பு என்று நான் கூறியது இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என எனக்கு தெரியும். எனவே தான் நான் கூறினேன். எதற்கு நீங்கள் காத்திருக்கிறீங்கள்? உக்ரைன் – ரஸ்யா போரில் பொதுமக்கள் கொல்ப்பட்டபோது முதலைக்கண்ணீர் வடித்தவர்கள் இன்று காசாவில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது அமைதியாக இருக்கின்றனர். எமது மக்கள் உயிருடன் இருப்பார்கள், உறுதியான எழுந்து நிற்பார்கள். காசாவில் இடம்பெறுவது இஸ்ரேலின் தற்பாதுகாப்பு அல்ல, திட்டமிட்ட இரத்தக்களரி' என்றார்.

 

இதனிடையே, ஏர்டோகனின் இந்த பேச்சை தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள துருக்கியின் இராஜதந்திரிகள் அனைவரையும், நாட்டைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.