உலகக் கோப்பை 2023 : இறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியா
17-11-2023

உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி அகமதாபாத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.
2003-ல் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி 300+ ரன்களை குவித்து பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அசத்தி மெகா வெற்றியைப் பெற்றது. உலகக் கோப்பை பைனல் வரலாற்றில் அதுதான் மெகா தோல்வியாக இந்தது இந்தியாவுக்கு. இந்நிலையில், அந்த வரலாறை மறக்கடித்து, புது வரலாறை எழுத இந்திய அணிக்கு தற்போது சரியான சந்தர்பம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி மெகா வெற்றியைப் பெற்று, 2003 பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த வரலாறை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த அணி நிறைவேற்றுமா என்பதை இறுதி போட்டியில்தான் தெரியும்.