நிர்மலா சீத்தாராமன் இலங்கைக்குப் பயணம்
01-11-2023

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கைக்கு பயணம் செய்துள்ள நிலையில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந் நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கா உட்பட பல தென்னிலங்கை அரசியல் தலைவர்களை அவர் சந்தித்து வருகின்றார். இந் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தில் சீத்தாராமன் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாயில் 82.40 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாற்றப்படும் என்றும் இந்தியாவின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.